அருணாசலம், க |Arunachalam, K
New Books
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் | 2012
Author : அருணாசலம், க
Book Category : தமிழ் இலக்கியம்
இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை இந்நூலிலுள்ள பின்வரும் ஐந்து கட்டுரைகளும் ஆராய்கின்றன: இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிப் போக்குகள், சுதந்திர இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்குகள் : சில குறிப்புகள், இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் (1960களுக்கு முற்பட்டவை), ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி : 1970களின் ஆரம்பம் முதல் 2000 வரை, ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் : சில குறிப்புகள்.
 
ISBN : 9789556593112 | Pages : 497  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 497
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் ( 1925 - 1965 ) | 2012
Author : அருணாசலம், க
Book Category : தமிழ் இலக்கியம்
ஈழத்தில் ஏறத்தாழ 1965ஆம் ஆண்டுவரை எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய ஆய்வாக இந்நூல் அமைகின்றது. மேலும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளை அவற்றின் வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்கின் அடிப்படையில் மூன்றுகாலப் பிரிவுகளாக வகுத்து, அவ்வக் காலகட்டத்தில் எழுந்த கதைகளைப் பொருட் பண்பின் அடிப்படையிற் பகுத்து மதிப்பீடு செய்யும் முறையே இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஏறத்தாழ 1965ஆம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதியினை தொடக்க காலம், மறுமலர்ச்சிக் காலம், 1952ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலம் எனப் பிரித்து, அவ்வக் காலப்பகுதிக் கதைகளின் பண்புகளை....
ISBN : 9789556592955 | Pages : 170  | Price : 650.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 482
இலக்கியக் கட்டுரைகள் | 2012
Author : அருணாசலம், க
Book Category : தமிழ் இலக்கியம்
பண்டைய தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்ற விடயங்கள் தொடர்பான இலக்கிய அவதானிப்புகளைக் கொண்ட பின்வரும் இலக்கியக் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது : மதுரைக் காஞ்சியில் அக்கால மக்களின் வாழ்வியல் அம்சங்கள், தொல்காப்பியத்தில் யாப்பும் அணியும், தமிழகத்தில் சமணசமயமும் வைதிக சமயங்களும், இந்துமத நிலையாமைக் கோட்பாடு: தமிழ் இலக்கியங்களை அடியொற்றிய சில குறிப்புக்கள், காரைக்கால் அம்மையாரும் பக்தி இயக்கமும் இலக்கியங்களும் - ஒரு சில குறிப்புக்கள், பக்தி இயக்கமும் அதன் விளைவுகளும், பட்டினத் தடிகள் அருளிச் செய்த திருப்பாடல்கள் - சில குறிப்புகள், இந்துமதம்: இலௌகீகமும் ஆத்மீகமும்.
ISBN : 9789556592924 | Pages : 144  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 479
Arunachalam, K's Books Recently Published by KBH

Powered By : Viruba