முருகையன், இ |Murugaiyan, E
Murugaiyan, E's Books Published by KBH
மொழிபெயர்ப்பு நுட்பம் | 2002
Author : முருகையன், இ
Book Category : ஏனையவை
இன்றைய சூழலிலே, பன்மொழித் தேர்ச்சியினை நாம் மனமுவந்து வரவேற்றல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்த ஒருவர், எந்த விடயத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களிற் பார்த்து விளங்கிக் கொள்ளும் வல்லமையைப் பெறுகிறார். பல்கோண நோக்கு, நோய்த்தன்மை வாய்ந்த பிடிவாதங்களுக்கு எதிரானது. அது பொறுமையின் விதைகளை மனித மனங்களிலே தூவி விடுகிறது. பொறுமை விரவிய பார்வை விரிவுக்கு மொழி நுட்பங்களை நன்கு உணர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் ஆற்றக்கூடிய உதவி ‘மலையினும் மாணப் பெரியது’. அவ்வாறான மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட முற்படுவோருக்கு ஒரு வழித்துணையாக, இந்த நூலின் ஒன்பது இயல்களும் அமைக்கப்பட்டுள்ளன... 
ISBN : | Pages : viii + 144  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 177
கவிதை நயம் | 2011
Author : முருகையன், இ
Book Category : தமிழ் இலக்கியம்
மனிதன் படைத்த இலக்கிய வடிவங்களுள் கவிதையே காலத்தால் முந்தியது, இசைத்தன்மை, ஓசைச் சிறப்பு உள்ளது. வாய்விட்டுப் பாடுவதால் பாட்டு என்போம். கவிதை இன்பம் தருவதோடு உயர் இலட்சியங்களையும் கொண்டது. பழையன, புதியனவாகப் பல்லாயிரக்கணக்கான கவிதைகள் தமிழில் உள்ளன. இவற்றிடை சிறந்தவற்றைத் தேடவும், சுவைக்கவும், உணர்பவனைப் பண்படுத்தவும் சிறந்த கவிதைகள் உதவும். அத்துடன் நல்லறிவு பெறுவதற்கும் கவிதையை உரைத்துத் தரங்காணும் முறையையும் இந்நூல் கூறும். உவமை, உருவகம், கற்பனை, ஓசை நயம், சொல் வளம்,பொருளாற்றல் முதலான கவிதை பற்றிய அனைத்துத் துறைகள் சார்ந்தும் இந்நூல் ஆராயும். கவிதையை நன்கு சுவைக்கவும் ஆய்ந்தறிந்து நலனாயவும் இந்நூல் துணைபுரியும்.
ISBN : 9789556592603 | Pages : 136  | Price : 131.25  | Size : 14 cm x 21 cm  | KBH No : 070

Powered By : Viruba