மௌனகுரு, சி |Mawnaguru, S
Mawnaguru, S's Books Published by KBH
சுவாமி விபுலாநந்தர் | 2006
Author : மௌனகுரு, சி
Book Category : வாழ்க்கை வரலாறு
பொருளடக்கம் : 1. அறிமுகம் / 2. விபுலாநந்தரின் வாழ்க்கைப் பின்னணி  / 3. விபுலாநந்தரின் ஆளுமைப் பின்னணி  / 4. விபுலாநந்தரின் சமூக நோக்கு  / 5. விபுலாநந்தரின் கலை, இலக்கியப் பங்களிப்பு  / 6. இசை பற்றிய நோக்கும் பணியும்  / 7. நாடகக் கலை பற்றிய நோக்கும் பணிகளும்  / 8. இலக்கிய நோக்கும் பணியும் / 9. நிறைவுரை.
ISBN : 9556590455(6) | Pages : 48  | Price : 150.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 217
நாடகம் - அரங்கியல் : பழையதும் புதியதும் | 2005
Author : மௌனகுரு, சி
Book Category : நாடகமும் அரங்கியலும்
ஈழத்தில் தமிழரிடையே வழங்கும் மரபு வழி நாடகங்கள் பற்றிய 12 ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மன்னார் முல்லைத்தீவு மலையகம் முதலாம் பிரதேசங்களில் தமிழரிடையே பயில் நிலையிலிருந்த மரபுவழி நாடகங்கள் / பாரம்பரிய நாடகங்கள் அவர்களிடையே ஏற்பட்ட அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு மாற்றங்கள் காரணமாகப் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளதினை இக்கட்டுரைகள் ஆய்வுரீதியாக விபரிக்கின்றன. மேலும் இவ்விரண்டாம் பதிப்பில் ‘கூத்தியல்’ என்ற கல்விப் புலத்தின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ள ‘ஈழத்துத் தமிழ்க் கூத்தியல் ஆய்வும் ஈழத்துத் தமிழ்க் கூத்தும்’ ‘கூத்தின் அழகியல்’ ஆகிய புதிய இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.
ISBN : 9559429698 | Pages : xxiv + 196  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 193
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு | 2008
Author : மௌனகுரு, சி
Book Category : நாடகமும் அரங்கியலும்
பண்டைக்காலம் தொட்டு இன்று வரையிலான ஈழத்து நாடக அரங்கின் வரலாற்றை இந்நூல் விளக்கி விபரிக்க முற்படுகிறது. நாடகத்தினை இலக்கியக் கலையாக அன்றி ஓர் அரங்கக் கலையாக நோக்கும் இந்த முயற்சி யாழ்ப்பாணம் மன்னார் மட்டக்களப்பு முல்லைத்தீவு சிலாபம் மலைநாடு ஆகிய அனைத்துப் பிரதேசங்களையும் தழுவி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நாடகங்களும் அரங்கக் கலைகளும் ஒரு பயில் துறையாக அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்நூல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும்.
ISBN : 955942937x | Pages : x + 245  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 109

Powered By : Viruba