யோதிலிங்கம், சி. அ |Yothilingam, S. A
New Books
இலங்கையில் அரசியல் கட்சிமுறைமை | 2008
Author : யோதிலிங்கம், சி. அ
Book Category : அரச அறிவியல்
அரசியற் கட்சி முறைமையைக் கற்றல் என்பது அரசியற் கட்சிகளின் வரலாறு கொள்கை செயற்பாடு என்பவற்றை கற்பதுடன் அவை நடைமுறையில் செயற்படும்போது மொத்தமாக ஏற்படும் போக்குகளைப் பற்றிக் கற்பதையும் குறிக்கின்றது. இந்த வகையில் இலங்கையில் இதுவரை நாம் அறிந்த வரையிலான அரசியற் கட்சிகளின் தோற்றம் வளர்ச்சி செயற்பாடுகள் எழுச்சி வீழ்ச்சி என்பன பற்றி இந்நூல் வரலாற்று நோக்கில் எடுத்துரைக்கின்றது. அரசியற் கட்சிகள் பற்றி தமிழில் போதியளவு நூல்கள் இல்லாத சூழலில் இந்நூல் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும்.
ISBN : 9789556591804 | Pages : xvi + 168  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 366
அரசறிவியல் ஓர் அறிமுகம் | 2007
Author : யோதிலிங்கம், சி. அ
Book Category : அரச அறிவியல்
இந்நூல் அரசறிவியல் கோட்பாடுகள் பற்றியும் அரசறிவியல் எண்ணக்கருக்கள் பற்றியும் ஓர் அறிமுகத்தை தருகின்றது. க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் 1ஆவது வினாத்தாளை மையமாக வைத்து இந்நூல் எழுதப்பட்டாலும் கலைமாணிப்பட்டப் படிப்பு மாணவர்க்கும் அரசியற் கோட்பாடுகள், எண்ணக்கருக்களை ஆராய விரும்புகின்ற அரசியல் ஆர்வலர்களுக்கும் அதிக பயன் தரக் கூடியதாக அமைந்துள்ளது. அரசியலை அறியவிரும்புகின்ற அனைவரும் கோட்பாடுகள், எண்ணக்கருக்கள் பற்றி தெளிவான விளக்கத்தினைப் பெற்றுக் கொள்வது அவசியமானதாகும். அவ்விளக்கத்தினை இந்நூல் வழங்குகின்றது.
ISBN : 9789556590714 | Pages : xvi + 271  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 255
ஒப்பியல் அரசாங்கம் | 2011
Author : யோதிலிங்கம், சி. அ
Book Category : அரச அறிவியல்
கடந்த கால, நிகழ்கால அரசியல் நிறுவனங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் ஒப்பீடு செய்வதன் மூலம் அரசறிவியலில் சில பொது முடிவுகளையும் விதிகளையும் அடைவதற்கு எத்தனிக்கின்ற ஒரு முறையே ஒப்பீட்டு அணுகுமுறையாகும். இந்நூல் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸ்லாந்து, சோவியத்யூனியன் ஆகிய ஆறு நாடுகளின் அரசாங்க முறைகளை ஒப்பிடுகின்றது. இவ் ஒப்பீட்டு அணுகுமுறையில் அரசாங்க முறையின் வரலாற்றுப் பிண்னணி, சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை அரசியற்கட்சிகள், அமுக்கக்குழுக்கள் என்பனவும், அடிப்படை உரிமைகள், வழிகாட்டி நெறிகள் என்பனவும் ஆராயப்படுகின்றன.
ISBN : 9789556593105 | Pages : x + 310  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 227
Yothilingam, S. A's Books Recently Published by KBH

Powered By : Viruba