வித்தியானந்தன், சு |Vithiyananthan, S
Vithiyananthan, S's Books Published by KBH
நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள் | 2009
Author : வித்தியானந்தன், சு
Book Category : நாடகமும் அரங்கியலும்
பேராசிரியர் சு. வித்தியானந்தனுடைய கலை இலக்கிய பணிகளுள் நாட்டார் கூத்துக்களின் மீட்பு பணியே அவரின் தலையாய தமிழ்ப் பணி எனலாம். இவருக்கு நாடு முழுவதும் அறிமுகம் பெற்றுத் தந்தது இப்பணியே. ஈழத்துத் தமிழர்களுடைய நவீன நாடகம் நடனம் நாட்டிய நாடகம் ஆகியவற்றிலே பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இவர் தெளிவுபடுத்திய மரபுவழி நாடக உத்திகள் என்றுமே வற்றாத ஊற்றுக் கண்களாய் அமைவன. அவரின் இந்நாடக நாட்டாரியற் பணிகளில் ஒன்று கட்டுரைகள் மூலமாக நாடக நாட்டாரியற் சிந்தனைகளை பரப்பியமை. இவ்வாறு நாடக நாட்டாரியற் சிந்தனைகள் பற்றி அவரால் எழுதப்பட்ட முக்கிய பத்துக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும்.
ISBN : 9559429124 | Pages : viii + 96  | Price : 225.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 092
தமிழர் சால்பு | 2006
Author : வித்தியானந்தன், சு
Book Category : தமிழ் இலக்கியம்
தமிழினத்தின் வரலாற்றில் சங்க காலம் எனப்படும் காலப்பிரிவில் எழுந்த இலக்கியங்கள் என இனங் கண்டறியப்பட்டனவற்றின் உள்ளடக்கங்களை வகுத்தும் தொகுத்தும் அக்கால நாகரிகத்தின் சகல ஆயத்தங்களையும் தெளிவுற எடுத்துக்கூறி அக்காலத்தை தமிழ் வாசகர்களின் முன்நிறுத்தும் அறிவியல் நிலைநின்று ஆய்வுப் பணியினை இந்நூல் போல் வேறு எந்த ஒரு தனிநூலும் இதுவரை நிறைவேற்றியதில்லையென்பர். அதன் காரணமாக இதற்கு அது முதலில் வந்த 1954 முதல் இன்று வரை எல்லாக் காலங்களிலும் புலமைசார் வாசக வட்டம் இருந்து வந்துள்ளது. அதனாலேயே இப்பொழுது இது மீளச்சுச் செய்யப்படுகின்றது...
ISBN : 9559429280 | Pages : xi + 238  | Price : 375.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 091

Powered By : Viruba