விசாகரூபன், கிருஸ்ணபிள்ளை |Visagaruban, K
Visagaruban, K's Books Published by KBH
இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் | 2009
Author : விசாகரூபன், கிருஸ்ணபிள்ளை
Book Category : தமிழ் இலக்கியம்
பல்வேறு கற்கைநெறிகளை இணைத்து அறிவைப் பூரணப்படுத்துகின்ற நோக்கு நிலையில் நாட்டார் வழக்காற்றியல் ( Folklore ) இன்று அனைத்துலகக் கல்விப்புலமாக வளர்ச்சியடைந்துள்ளது. இப்புலமைத் துறை குறித்த ஆர்வங்கள் உலகெங்கும் பரவலாக வெளிப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான விழிப்புணர்வைப் பல்வேறு நிலைகளிலும் ஏற்படுத்துவதாக அமைந்தது 1980இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய ‘இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்’ குறித்த கருத்தரங்காகும். இலங்கைத் தமிழர்களது பண்பாட்டுத் தனித்துவங்கள் குறித்த அடையாளப்படுத்துகைக்கு இக்கருத்தரங்கு பெரிதும் துணை செய்தது.... 
ISBN : 9789556592064 | Pages : xx + 302  | Price : 750.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 392
தமிழில் அகத்திணைக் கவிதை மரபு | 2009
Author : விசாகரூபன், கிருஸ்ணபிள்ளை
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூல் தொல்காப்பியம், இறையனார்அகப்பொருள், நம்பிஅகப்பொருள் ஆகிய மூன்று நூல்களில் காணப்படும் அகத்திணை குறித்த கருத்துக்களை முறைப்படுத்தி ஆராய்வதாகமைகின்றது. இக்கவிதை மரபில் காலந்தோறும் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் குறித்த செய்திகளும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. அவசியமான இடங்களில் சங்க இலக்கியங்களில் இருந்து பொருத்தமான எடுத்துக்காட்டுக்களும்; தரப்பட்டுள்ளன. தமிழில் அகத்திணைக் கவிதை மரபு பற்றி அறிய விரும்புகின்றவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். பல்வேறு தரநிலைகளிலும் தமிழை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன் விளைக்கும்.
ISBN : 9789556591996 | Pages : xii + 255  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 385

Powered By : Viruba