வேலுப்பிள்ளை, ஆ |Veluppillai, A
New Books
சாசனமும் தமிழும் | 2011
Author : வேலுப்பிள்ளை, ஆ
Book Category : வரலாறு
தமிழ்க்கல்வி தமிழ்ச் சாசன அறிவு இன்றிப் பூரணத்துவம் பெறாது. தமிழ் இலக்கிய வளத்துக்குத் தமிழ்ச்சாசன வளம் குறைந்ததன்று. தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள், தமிழ்ச்சாசனங்கள், தமிழ் நாட்டுத் தொல்பொருட் சின்னங்கள் என்பன பண்டைக்கால, இடைக்காலத் தமிழகத்தை அறிந்துகொள்வதற்கு வேண்டிய முக்கியமான மூன்றுவகை மூலாதாரங்களெனலாம். இந்நூல் தமிழ்ச்சாசனக் கல்வி எவ்வெவ் வகையிலே தமிழ்க் கல்விக்கு உதவுகிறதென்பதை எடுத்துக் காட்டுகின்றது. இந்நூலிலுள்ள வரிவடிவம், மொழி, பண்பாடு, இலக்கியம், வழக்காறுகள் என்ற பகுதிகள் சாசனங்கள் எவ்வெவ்வகை ஆராய்ச்சிகளுக்கு இடந்தந்து நிற்கின்றன என்பதை விரிவாக எடுத்துக்காட்டுகின்றன.
 
ISBN : 9789556592849 | Pages : 272  | Price : 175.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 470
தமிழர் சமய வரலாறு | 2011
Author : வேலுப்பிள்ளை, ஆ
Book Category : தமிழ் இலக்கியம்
சமய பொருளை விளக்க எழுந்த இலக்கியங்களும் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் மொழியாலும் பலவாக விரிவாகின்றன. எவ்வெச்சமயப் பொருளை எவ்வெவ் இலக்கியம் எவ்வெக் காலத்தில் எவ்வெவ்வாறு கூறியுள்ளது என்ற நோக்கிலே பல ஆராய்ச்சி நூல்கள் எழுகின்றன. இன்னும் எழ இடமுண்டு. இங்கு கூறப்படும் கருத்துக்கள் பொது வகையிலே ‘சமய இலக்கியமும் காலமாறுதலும்’ என்ற தலைப்புக்குப் பொருந்துபவை. ஆனால் சிறப்பு வகையிலே சமயம் என்பது இந்து சமயத்தைக் குறிக்கவும் இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தைக் குறிக்கவும் காலமாறுதல் என்பது குறிப்பிட்ட காலப் பகுதிகளுக்கிடையே ஏற்பட்ட மாறுதலைக் குறிக்கவும் இங்கு வழங்கப்படுகிறது.
ISBN : 9789556592641 | Pages : 240  | Price : 150.00  | Size : 125 mm x 185 mm  | KBH No : 450
ஈழத்து அறிஞர் ஆளுமைகள் | 2010
Author : வேலுப்பிள்ளை, ஆ
Book Category : வாழ்க்கை வரலாறு
இருபதாம் நூற்றாண்டிலே புகழோடு வாழ்ந்த பாவலர் துரையப்பாபிள்ளை, வித்துவான் கணேசையர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் ஆகிய ஈழத்து அறிஞர்கள் நால்வரின் ஆளுமைகளை எடுத்துக்காட்டுவதாக இந்நூல் அமைகின்றது. பொருளடக்கம் : 1. பாவலர் துரையப்பாபிள்ளையின் யாழ்ப்பாணம் - அன்றும் இன்றும் மீள்பார்வை  / 2. இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை  / 3. பண்டிதமணி போற்றிய யாழ்ப்பாணத்துச் சைவத்தமிழ்ப் பாரம்பரியம்  / 4. பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக்கோலம்.
ISBN : 9789556592498 | Pages : viii + 144  | Price : 375.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 435
Veluppillai, A's Books Recently Published by KBH

Powered By : Viruba