றமீஸ் அப்துல்லா |Rameesh Abdullah
Rameesh Abdullah's Books Published by KBH
அம்பாறை மாவட்டச் சிறுகதை ஆளுமைகள் | 2012
Author : றமீஸ் அப்துல்லா
Book Category : தமிழ் இலக்கியம்
நான்கு இயல்களைக் கொண்ட இந்நூல் அம்பாறைமாவட்டச் சிறுகதைகளூடாக அம்மாவட்டத்தின் சிறுகதை வளர்ச்சியினையும் அம்மாவட்டச் சமூகப் பிரச்சினைகளையும் அம்மாவட்ட ஆறு சிறுகதை எழுத்தாளர்களின் சிறப்பான பங்களிப்பினையும் நாம் எல்லோரும் அறிய வைக்கின்றது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துஸ்ஸமது, மருதூர்க் கொத்தன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், உமாவரதராஜன், எம்.ஐ.எம்.றஊப், திருக்கோவில் கவியுவன் ஆகிய ஆறு சிறுகதை எழுத்தாளர்களுடைய ஆக்கங்களின் பொருள், சமூக நோக்கு, கவர்ச்சி, ஆற்றல்கள் ஆகியன  ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன. ஒருமாவட்டத்தின் இலக்கிய ஆளுமைக்கு வகை மாதிரியாக  இந்நூல் அமைகின்றது.
ISBN : 9789556593358 | Pages : 162  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 521
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் ( 1841 - 1950 ) | 2012
Author : றமீஸ் அப்துல்லா
Book Category : ஊடகவியல்
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களிலிருந்து வேறுபட்டு பல்வேறு புதிய தகவல்களையும், அறியப்படாத பல பத்திரிகைகள் பற்றிய விபரங்களையும் தரும் இந்நூல், இதழியல் பற்றியும் அச்சு ஊடக தோற்றம், கோட்பாடு, அதனால் ஈழத்தில் உருவான பத்திரிகைகளின் (1841-1950) பின்னணி அதன் சமூக, அரசியல், இலக்கிய முக்கியத்துவம் பற்றியும் விரிவாக விபரிக்கின்றது. 
ISBN : 9789556593334 | Pages : xii + 260  | Price : 650.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 519

Powered By : Viruba