தில்லைநாதன், சி |Thillainathan, S
New Books
இலக்கியமும் பண்பாடும் | 2012
Author : தில்லைநாதன், சி
Book Category : தமிழ் இலக்கியம்
இந்நூல் பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் அவ்வப்போது எழுதி வெளியிட்ட பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பாகும். இவ்வாய்வுக் கட்டுரைகள் பல்வேறு விடயங்கள் பற்றியவை. சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் மனிதாபிமானச் சிந்தனைகள் முதல் இன்றைய வாழ்வில் இலக்கியம் வரை, மாணிக்கவாசகர் முதல், யுகப் பெருங் கவிஞனான பாரதியார் வரை, சமயம் முதல் மார்க்சியம் வரை, இலக்கிய வரலாறு கற்றல் முதல் இலக்கியத் திறனாய்வு கற்பித்தல் வரை, சமய வழிபாடு முதல் ஆன்மீக விளக்கம் வரை எனப் பேராசிரியரது பார்வை பரந்து சென்றுள்ளதை இந்நூலிலே தரிசிக்கலாம்.
ISBN : 9789556593419 | Pages : 98  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 527
இலங்கைத் தமிழ் இலக்கியம் | 2012
Author : தில்லைநாதன், சி
Book Category : தமிழ் இலக்கியம்
இலங்கைத் தமிழ் இலக்கியம் என்ற வகையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒன்றுடன் ஒன்று இன்றியமையாத் தொடர்பினைக் கொண்டுள்ளமையும் ஒரு முகப்பாடும் முழுமையும் பெற்றுள்ளமையும் மனங்கொள்ளத்தக்கவை. ஈழத்துப் பூதந்தேவனார் முதல் ஈழத்தில் நடந்த இலக்கியச் சர்ச்சைகள் வரை, தட்சிண கைலாசபுராணம் முதல் மலையகத் தமிழ் இலக்கியம் வரை, நாவலர் முதல் பேராசிரியர் உவைஸ் வரை, உரைநடை வளர்ச்சி முதல் சிறுகதை வளர்ச்சிவரை, பேராசிரியரது கண்ணோட்டம் பாய்ந்திருப்பதை இந்நூலில் அவதானிக்கலாம். கல்லூரிகளில் தமிழ் பயிலும் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் பட்டப் படிப்பினை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அருமருந்தாக இந்நூல் அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
 
ISBN : 9789556593402 | Pages : 154  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 526
சோழர்கால அரசவை இலக்கியம் | 2012
Author : தில்லைநாதன், சி
Book Category : தமிழ் இலக்கியம்
இடைக்காலத்தில் பெரும் பேரரசாகத் திகழ்ந்த சோழர் ஆட்சியில் முதன் முதல் தமிழகம் முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ் வந்தது. அக்காலம் தமிழ் நாகரிக, பண்பாட்டு வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகத் திகழ்ந்து. பல்வேறு கலைகளின் வளர்ச்சிக்குத் தூண்டு கோலாக அமைந்தது. வேறு எந்தப் பகுதியைக் காட்டிலும் சோழ நாட்டில் தமிழிலக்கியம் செழிப்புற்றது. பெரும் இலக்கியங்களாகப் போற்றப்படும் பெரியபுராணமும் கம்பராமாயணமும் இங்குதான் இயற்றப்பட்டன. ஆகவே, சோழர் கால அரசவை இலக்கியங்களை விரிவாக ஆராயும் இந்நூல் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. பேராசிரியர் தில்லைநாதன் பரணி, உலா ஆகிய இலக்கிய வகைகளோடு பெரிதும் தொடர்புள்ள கல்வெட்டு மெய்க்கீர்த்திகளையும் ஆராய்கிறார். பேராசிரியர் தில்லைநாதன் வழங்கியுள்ள இந்த ஆய்வுநூல் சோழர் கால தமிழிலக்கியச் செழுமையை அறிய உதவுவதோடு, அக்கால அரசியலின் தன்மையை அறியவும் மிகவும் பயன்படும்.
ISBN : 9789556593259 | Pages : 174  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 512
Thillainathan, S's Books Recently Published by KBH

Powered By : Viruba