பத்மநாதன், சி |Pathmanathan, S Prof
New Books
யாழ்ப்பாண இராச்சியம் | 2011
Author : பத்மநாதன், சி
Book Category : வரலாறு
அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள தொல்லியல் சான்றுகளின் அடிப் படையில் யாழ்ப்பாண இராச்சியத்தின் உருவாக்கம் பற்றிய முன்னைய கருத்துக்களை மறுபரிசீலனை செய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. பொலன்னறுவை இராசதானியின் வீழ்ச்சியோடு ஒரு மத்தியமயமான ஆட்சி முறையின் அழிவில் யாழ்ப்பாண இராச்சியமும் வன்னி இராச்சியங்களும் எழுச்சி பெற்றன என்ற கருத்தை இப்பொழுது முற்றாக நிராகரிக்கும் இந்நூலின் ஆசிரியர் பூர்வீக காலம் முதலாக ஏற்பட்ட தமிழர் குடியேற்றங்களும் அவை தொடர்பான அரசியல், சமூக, பொருளாதார முறைகளுமே அவற்றின் எழுச்சிக்கு அடிப்படையானவை என்ற சிந்தனைக்கு இந்நூலில் வலு சேர்க்கின்றார். 
ISBN : 9789556593082 | Pages : viii + 202  | Price : 490.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 495
இலங்கையில் இந்து சமயம் | 2005
Author : பத்மநாதன், சி
Book Category : இந்து சமயம்
இந்நூல் ஆதி காலம் முதலாக பொலநறுவைக் காலம் முடிவு பெறும் வரை இலங்கையில் இந்து சமயம் தொடர்பாக ஏற்பட்ட வளர்ச்சிகளைப் பற்றியது. இதில் ஆதி அநுராதபுர காலம், பிந்திய அநுராதபுர காலம், சோழர் ஆட்சிக்காலம், பொலநறுவைக் காலத்தில் அரசரும் ஆலயங்களும் பொலநறுவைக் காலத்தில் வணிக கணங்களும் கலாசாரமும் பொலநறுவைக் காலத்தில் கோயில்களும் படிமங்களும் ஆகிய 6 பிரிவுகளும் அதனுள் 19 அத்தியாயங்களும் அடங்கியுள்ளன. இந்நூல் ஒரு கலைக்களஞ்சியம் போன்றது. இதில் இந்து சமயம் இந்து கலாசாரம் இலங்கை வரலாறு தென்னிந்தியப் பண்பாட்டு வரலாறு தமிழர் வரலாறு தமிழிலக்கியம் இலங்கைத் தமிழர் வரலாறு என்பன பற்றிய பிரதானமான அம்சங்களும் புதிய விவரங்களும் அடங்கியுள்ளன....
ISBN : 9559429566 | Pages : xxviii + 476  | Price : 700.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 190
ஈழத்து இலக்கியமும் வரலாறும் | 2004
Author : பத்மநாதன், சி
Book Category : தமிழ் இலக்கியம்
ஈழத்து இலக்கியமும் வரலாறும் என்னும் இந்நூல் இலங்கைத் தமிழரின் பாரம்பரியம் பற்றிய கருவ10லம். இதிலே சமூக வரலாறு, அரசியல், சமூக வழமைகள், இலக்கிய மரபுகள், ஆலய வழமைகள், தொல்பொருட் சின்னங்கள், தமிழ்ச் சாசனங்கள், சமுதாய நிறுவனங்கள் என்பன பற்றிய அரிய விவரங்கள் அடங்கியுள்ளன. பழைய மரபுகளைப் புரிந்துகொள்வதற்கு வேண்டிய புதிய சிந்தனைகளும், முன்பு நூல்களில் வெளிவராத பெருமளவிலான புதிய விவரங்களும் இதிலே காணப்படுகின்றன. இந்நூலில் உள்ள பதினாறு கட்டுரைகளில் எட்டுக் கட்டுரைகள் - வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, ஸ்ரீ தக்ஷ்ணகைலாசபுராணம், கோணசேர் கல்வெட்டு போன்றவை - இலங்கைத் தமிழரின் வரலாற்று நூல்கள் பற்றியவை. 
ISBN : 9559429442 | Pages : xvi + 352  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 180
Pathmanathan, S Prof's Books Recently Published by KBH

Powered By : Viruba