கிருஷ்ணராஜா, சோ |Krishnarajah, S
New Books
மெய்யியில் : ஓர் அறிமுகம் | 2011
Author : கிருஷ்ணராஜா, சோ
Book Category : மெய்யியல்
மெய்யியல் எனும் கல்வித்துறையின் விடயப்பரப்பை 1. அறிவாராய்ச் சியியல் ( Epistemology ), 2. உள்பொருளியல் ( Ontology ) அல்லது பௌதீக வதீதவியல் ( Metaphysics ), 3. மதிப்பியல் ( Axiology ) என மூன்றாக வகுத்துக் கூறுவர். இம்மூன்று பிரிவுகளுள் அறிவாராய்ச்சியியல், உள்பொருளியல் ஆகிய இரண்டினைப் பற்றிய ஆழமான ஆய்வுரையாக "மெய்யியல் - ஓர் அறிமுகம்" என்னும் இந்நூல் விளங்குகின்றது. பக்க அளவில் இந்நூல் சிறியதே ஆயினும், கருத்தாளம் மிக்கதாக, மெய்யியல் பற்றிய முழுமையான விளக்கத்தைத் தருவதாக அமைந் துள்ளது. மாணவர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் உயர்தரத்தினதாய் அமைந்துள்ளது. மெய்யியல் பற்றி எழுதப்பட்ட தமிழ் பாடநூல்களில் காணமுடியாத பல விடயங்கள் இந்நூலில்...
ISBN : 9789556592948 | Pages : 481  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 481
பண்பாடு : சமூக மெய்யில் நோக்கு | 2010
Author : கிருஷ்ணராஜா, சோ
Book Category : சமூகவியல்
இந்த எண்பது பக்க ஆய்வில் காலஞ்சென்ற பேராசிரியர் சோமசுந்தரம் கிருஷ்;ணராஜா பண்பாடு (Culture) என்ற எண்ணக்கரு பற்றிய பல்வேறு அம்சங்களையும் பண்பாட்டின் துறைகளையும் பண்பாடு என்பது ஒட்டு மொத்தமாக எவையெவற்றையடக்கியுள்ளது என்பது பற்றிய மேல்நாட்டு அறிஞர்களுடைய கருத்துக்களையும் சுருக்கமாகத் தொகுத்து அதேநேரம் நூலுக்கான சிந்தனையோட்ட அமைப்புக்கு ஊறு ஏற்படாமல் அமைத்துத் தந்துள்ளார் கிருஷ்ணராஜா சிந்தனை உலகிலே வாழ்ந்தவர். ஆனால் அச் சிந்தனை உலகு யதார்த்தத்தைப் புறக்கணித்ததொன்றல்ல..... 
ISBN : 9789556592351 | Pages : xii + 82  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 421
சங்ககாலச் சமூகமும் சமய-மெய்யியற் சிந்தனைகளும் | 2007
Author : கிருஷ்ணராஜா, சோ
Book Category : தமிழ் இலக்கியம்
பண்டைத் தமிழரின் சமய-மெய்யியற் சிந்தனைகளை அவர்களது உலகக் கண்ணோட்டத்தைச் சரிவரப்புரிந்து கொள்ளுவதற்கான அடிப்படை திணைக்கோட்பாடாகும் என்பதே இந்நூலின் முக்கிய செய்தியாகும். அதுமட்டுமல்லாது ‘தமிழர் அழகியல்’ பற்றிய புரிதலுக்கும் எவ்வாறு திணைக்கோட்பாடு உறுதுணையாகிறதென்பதும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சங்கால சமூகப் பிண்ணனி சமய மெய்யியற் சிந்தனைகள் சங்க தமிழர் அழகியல் ஆகிய அத்தியாயங்களுடன் பின்னிணைப்பாக சிலப்பதிகாரத்தில் பெண் என்கின்ற கட்டுரையும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.
ISBN : 9789556590846 | Pages : viii + 94  | Price : 200.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 267
Krishnarajah, S's Books Recently Published by KBH

Powered By : Viruba