கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம் |Krishnamohan, T
Krishnamohan, T's Books Published by KBH
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் | 2012
Author : கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்
Book Category : அரச அறிவியல்
உலக நாடுகளின் பெரும் கவன ஈர்ப்பிற்குள்ளாகியுள்ளதொரு நாடாக இலங்கையுள்ளது. கடல்வழித் தொடர்பாடலில் எதிர்காலத்தில் இலங்கை வகிக்கக்கூடிய வகிபாகம் மிகவும் காத்திரமானதாகும். கடல்வழித் தொடர்பாடலில் முன்னிலைக்கு வருவதற்கு முயற்சிக்கும் ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்துவதனூடாக இலங்கையினைத் தமது செல்வாக்கிற்குட்பட்ட நாடாக வைத்திருக்க முயற்சிசெய்கின்றன. இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளைச் சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலகநாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.
ISBN : 9789556593433 | Pages : xiv + 174  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 529
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள் | 2008
Author : கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்
Book Category : அரச அறிவியல்
தொழில்நிலையும் வேதனங்களும் இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களது இரட்டைப் பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆரம்பகாலத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் இல்லா விட்டாலும் 1930 ஆம் ஆண்டுகளின் பின்னர் தொழிற்சங்கங்கள் செயற்பட ஆரம்பித்திருந்தன. இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் வேதனம் வேலை நேரம் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொழிற்சங்கங்கள் அதன் தலைமைத்துவம் அது மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்நூல் ஆராய்கின்றது.
ISBN : 9556591249 | Pages : xx + 96  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 315
ஒப்பியல் பொதுநிர்வாகம் | 2007
Author : கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்
Book Category : அரச அறிவியல்
அரசறிவியலில் பொதுநிர்வாகம் ஒரு பிரதான பரிமாணமாகும். பல்கலைக்கழக மட்டத்தில் பொதுநிர்வாகம் தொடர்பாகத் தமிழில் ஒரு சில நூல்களே வெளிவந்துள்ளன. அந்நூல்கள் கூட ‘ஆளணி நிர்வாகம்’ என்ற பிரிவிற்குள் சிவில் சேவையை உள்ளடக்கிச் சுருக்கமாகவே நோக்கியுள்ளன. ஆனால் ‘ஒப்பியல் பொதுநிர்வாகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாக முறைமை’ என்ற இந்நூல் பொதுநிர்வாகத்தின் மகுடம் போன்ற சிவில் சேவையைக் கருப் பொருளாக்கி ஒப்பிட்டு ரீதியாக விரிவான ஆய்வை மேற்கொள்கின்றது. அவ்வகையில் இந்நூல் தனது தனித்துவமான முத்திரையை ஆழமாகப் பதிக்கின்றது.
ISBN : 9789556590919 | Pages : xii + 88  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 275

Powered By : Viruba