குலரத்தினம், க. சி |Kularathinam, K. C
New Books
இந்து சமயத்தின் சீர்திருத்த இயக்கங்கள் | 2010
Author : குலரத்தினம், க. சி
Book Category : இந்து சமயம்
சைவத்தையும் தமிழையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்த சைவப்புலவர் க.சி. குலரத்தினம் அவர்கள் உயர்தர வகுப்பில் இந்து நாகரிகத்தை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்கள் நலன் கருதி (1979ஆம் ஆண்டிலும் 1980 ஆம் ஆண்டிலும்) பல பகுதிகளைக் கொண்ட ‘இந்து நாகரிகம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுப் பலரது பாராட்டினைப் பெற்றவர். ‘இந்து நாகரிகம்’ என்னும் அத்தொகுதியில் இடம்பெற்றிருந்த ‘இந்து சமயத்தின் இக்காலச் சீர்திருத்த இயக்கங்கள்’ என்ற பாடம் இப்பொழுது தனிநூல் வடிவில் மறுபிரசுரமாக மாணவர்களது நலன் கருதி வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதாக விளங்கும் வண்ணம் தெளிவான மொழிநடையில் ஆசிரியர் சீர்திருத்த இயக்கங்களின் முக்கிய அம்சங்களை விளக்கியுள்ளார்....
ISBN : 9789556592467 | Pages : xvii + 252  | Price : 600.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 432
அறுவகைச் சமயங்கள் | 2010
Author : குலரத்தினம், க. சி
Book Category : இந்து சமயம்
சண்மதங்கள் என அழைக்கப்படும் அறுவகைச் சமயங்களான சைவம் வைணவம் சாக்தம் காணபத்தியம் கௌமாரம் சௌரம் ஆகிய வைதிக சமயங்கள் இந்து சமயத்துள் அடங்குபவை. சிவனை வழிபடும் சைவம் திருமாலை வழிபடும் வைணவம் சக்தியை வழிபடும் சாக்தம் கணபதியை வழிபடும் காணபத்தியம் முருகனை வழிபடும் கௌமாரம் சூரியனை வழிபடும் சௌரம் ஆகிய இவ் அறுவகைச் சமயங்களைப் பற்றி இந்நூல் விரிவாக விபரிக்கின்றது.
ISBN : 9789556591743 | Pages : vii + 90  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 360
இந்துநாகரிகத்தின் மூலங்கள் | 2009
Author : குலரத்தினம், க. சி
Book Category : இந்து சமயம்
இந்துநாகரித்தின் மூலங்களை எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்துநாகரிகத்தின் ஆரம்ப வரலாறு இந்துநதிக் கலாசாரம் வேதங்களில் காணப்படும் நாகரிகம் ஆகமங்களில் காணப்படும் நாகரிகம் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் காணப்படும் மரபுகள் புராணங்களில் காணப்படும் மரபுகள் தர்மசாத்திரங்களில் காணப்படும் மரபுகள் என ஏழு அத்தியாயங்களினூடாக இந்நூல் இந்துநாகரிகத்தின் மூலங்களை விபரிக்கின்றது.
ISBN : 9789556591736 | Pages : viii + 94  | Price : 225.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 359
Kularathinam, K. C's Books Recently Published by KBH

Powered By : Viruba