குணரத்தினம், வேலுப்பிள்ளை |Gunarathinam, V
New Books
முரண்பாடும் சமாதானமும் | 2012
Author : குணரத்தினம், வேலுப்பிள்ளை
Book Category : அரச அறிவியல்
இன்று குடும்பத்தில் இருந்து சர்வதேசம் வரை முரண்பாடு படிப்படியாக வளர்ச்சியடைந்து அழிவை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, தனி நபர்களுக்கிடையிலான, குழுக்களுக்கிடையிலான, அரசுகளுக்கிடையிலான, அரசுகளுக்குள்ளேயான முரண்பாடுகள் அழிவை ஏற்படுத்தும் ஒன்றாகக் காணப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் இணக்கப்பாடின்மையையும் வேறுபாடுகளையும் கையாள வன்முறை ஒருமார்க்கமாக மாறுகின்றது. இந்நிலையில் இந்நூலானது முரண்பாட்டுக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் தடுப்புகளும், மத்தியஸ்தத்தின் பயன்பாடுகள், பேச்சுவார்த்தைக்கான அணுகுமுறைகளும் நுட்பங்களும், சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான இணக்கப்பாடு என்பனவற்றை ஆராய்கின்றது.
 
ISBN : 9789556593495 | Pages : ix + 114  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 535
அரசியல் விஞ்ஞான ஆய்வின் அணுகுமுறைகள் | 2009
Author : குணரத்தினம், வேலுப்பிள்ளை
Book Category : அரச அறிவியல்
அணுகுமுறை என்பது ஒரு விடயத்தை இலகுவாகவும் விரைவாகவும் தெளிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வழிமுறையாகும். எந்தவொரு கற்கைத் துறையும் தனித்து ஒரு துறையோடு மட்டும் நின்று விருத்தி பெறுவதில்லை. ஏனைய கற்கைத் துறைகளோடு இணைந்தே வளர்ந்து வருகின்றது. அரசறிவியலும் அதற்கு விதிவிலக்கானதல்ல. இதனடிப்படையிலேயே அரசறிவியற் கற்கைநெறியை ஆய்வு செய்வதற்கு பல்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசறிவியல் விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படும் 13 அணுகுமுறைகள் பற்றி ஆராய்கின்ற இந்நூல்.....
ISBN : 9789556591934 | Pages : xii + 64  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 379
அரசறிவியல் | 2009
Author : குணரத்தினம், வேலுப்பிள்ளை
Book Category : அரச அறிவியல்
ஓர் அரசு தோன்றும் முறை தொடக்கம் அதில் பின்பற்றப்பட வேண்டிய எண்ணக்கருக்கள் வரை அரசியல் துறையில் காணப்படும் மூலதத்துவங்களை சிறப்பாக விபரிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. அரசறிவியலுக்கான விளக்கம், அதனை கற்பதற்கான வழிமுறைகள் என்பன தெளிவாக விளக்கப்படுவதுடன் அரசினுடைய தோற்றம், அதனுடைய தன்மை, அதன் எதிர்காலம் என்பன பற்றிய பல கோட்பாடுகளையும் தர்க்கரீதியாக இந்த நூல் விளக்குகின்றது. அத்துடன் நவீன அரசு பற்றிய கோட்பாடுகளையும் விளக்கி; லிபரல் வாதம், மார்க்சிசம், பாசிஸம் பற்றிய அண்மைக்கால மாற்றங்களையும் ஆய்வு செய்கின்றது. 
ISBN : 9789556591828 | Pages : x + 181  | Price : 325.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 368
Gunarathinam, V's Books Recently Published by KBH

Powered By : Viruba