கைலாசபதி, க |Kailasapathi, K
New Books
இலக்கியமும் திறனாய்வும் | 2007
Author : கைலாசபதி, க
Book Category : தமிழ் இலக்கியம்
எழுத்தாளன் தனித்து இருந்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப் பிராணி, காலந்தோறும் சமுதாயத்தில் முரண்பாடுகளும் போராட்டங்களும், இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மத்தியில் வாழும் எழுத்தாளன் இவற்றுக்கு முகம் கொடுத்து புரிந்து கொள்வதோடு அவற்றுக்கான தீர்வுகொள்ளும் தகமையிலும் அவனது இலக்கியப் படைப்பின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது. திறனாய்வு என்பது வெறும் விவரணமோ, கூற்றுத்திறனோ அன்று. அழகியல் சார்ந்த முயற்சியாக இருக்கும்வேளை ஆய்வறிவு சார்ந்த ஓர் ஆயுதமாகவும் அது விளங்குகின்றது. இப்பின்புலத்தில் மொழியும் இலக்கியமும், இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகளுடன் தற்கால தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்குகள் பற்றி இந்நூல் விரிக்கும்.
ISBN : 9789556592597 | Pages : 174  | Price : 187.50  | Size : 145 mm x 215 mm  | KBH No : 445
சமூகவியலும் இலக்கியமும் | 2009
Author : கைலாசபதி, க
Book Category : சமூகவியல்
மனிதப் பண்பியல் துறைகளுடன் சமூக விஞ்ஞானத் துறையாக வளர்ந்து வரும் சமூகவியலும் இலக்கிய ஆய்வுக்கு இன்று உட்பட்டுள்ளது. இந்நூலில் சமூகவியலும் இலக்கியமும் தனிக்கட்டுரையாக விளக்கும். இப்புதிய நோக்கில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் இசைத்தமிழ் நாட்டார் பாடல்கள் இலக்கியத் திறனாய்வின் நலன் ஆகிய துறைகள் தனித்தனியாக இந்நூலில் அலசப்பட்டுள்ளன.
ISBN : 9789556591798 | Pages : 236  | Price : 300.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 365
அடியும் முடியும் | 2007
Author : கைலாசபதி, க
Book Category : தமிழ் இலக்கியம்
சிவனின் அடியையும் முடியையும் தேடிச் சென்ற திருமாலும் பிரமனும் தோல்வியடைவது புராணக்கதை. தமிழறிஞர்களும் தமிழின் தொன்மையை அளந்தறிய முடியாது என்று பெருமிதம் கொள்கின்றனர். புவியியல் ஆய்வுகள் கதிரவனிலிருந்து பிரிந்து உலகம் உருவாகிய காலத்தையும் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியையும் மனிதனின் தோற்றத்தையும் அறிவியல் ஆய்வுகள் திட்டமாக வரையறை செய்துள்ளன. இம்முறையில் தமிழின் தொன்மையையும் ஒரு காலவரையறைக்கு உட்பட்டதாகும் என்கிறார் கைலாசபதி. அகலிகைக் கதையின் அடிமுடியை வால்மீகியிலிருந்து புதுமைப்பித்தன் முருகையன் வரை புதுப் பொருளில் விளக்குகிறார். சங்க இலக்கியத்தில் ஆரம்பித்த கடவுள் வாழ்த்து 20ஆம் நூற்றாண்டில் தமிழ் வாழ்த்தாக முதன்மையாக மாறுவதை நிரூபிக்கிறார்...
ISBN : 9789556591781 | Pages : viii + 360  | Price : 375.00  | Size : 14 cm x 21 cm  | KBH No : 364
Kailasapathi, K's Books Recently Published by KBH
Kailasapathi, K's All Books Published by KBH
திறனாய்வுப் பிரச்சினைகள் | தமிழ் இலக்கியம் | 2012
நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் | தமிழ் இலக்கியம் | 2012
கவிதை நயம் | தமிழ் இலக்கியம் | 2011
சமூகவியலும் இலக்கியமும் | சமூகவியல் | 2009
ஒப்பியல் இலக்கியம் | தமிழ் இலக்கியம் | 2009
அடியும் முடியும் | தமிழ் இலக்கியம் | 2007
இலக்கியமும் திறனாய்வும் | தமிழ் இலக்கியம் | 2007
கைலாசபதி முன்னுரைகள் | தமிழ் இலக்கியம் | 2007
தமிழ் வீரநிலைக் கவிதை | தமிழ் இலக்கியம் | 2006
இரு மகா கவிகள் | தமிழ் இலக்கியம் | 2006
Tamil Heroic Poetry | தமிழ் மொழி | 2002
ஈழத்து இலக்கிய முன்னோடிகள் | தமிழ் இலக்கியம் | 2001
இலக்கியச் சிந்தனைகள் | தமிழ் இலக்கியம் | 2001
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் | தமிழ் இலக்கியம் | 1999
பாரதி ஆய்வுகள் | தமிழ் இலக்கியம் | 0000
நாவலர் பற்றி கைலாசபதி | வாழ்க்கை வரலாறு | 0000

Powered By : Viruba