சபாநாதன், குல |Sabanathan, Kula
New Books
நயினை நாகேஸ்வரி | 2006
Author : சபாநாதன், குல
Book Category : இந்து சமயம்
ஈழத்தில் சைவ சமயத்தை சார்ந்த அளவில் தேவி வழிபாட்டின் பழமைக்கும் புதுமைக்கும் மகிமைக்கும் இணையற்ற அத்தாட்சியாக விளங்குவது நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம். அதன் பழைய வரலாற்றையும் அங்கே அம்பாள் பவனிவரும் புதிய அலங்கார தேரின் அற்புத சிற்ப வேலைப்பாட்டையும் அதில் அமைந்துள்ள சித்திரங்களின் தத்துவங்களையும் விளக்குவதுடன் அம்பாள் மேல் பாடப்பெற்ற தோத்திரங்களையும் ஆலயம் தொடர்பான அரிய பல புகைப்படங்களையும் இந்நூல் வழங்குகின்றது.
ISBN : 9559429949 | Pages : 88  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 231
யாழ்ப்பாண வைபவமாலை | 2007
Author : சபாநாதன், குல
Book Category : வரலாறு
யாழ்ப்பாண மன்னர்களின் சரித்திரத்தை ஆராய்ந்து அறிதற்குத் துணை செய்யும் ஆதாரநூல்கள் கைலாயமாலை, வையா பாடல், யாழ்ப்பாண வைபவமாலை என்பன. இவற்றுள் யாழ்ப்பாண வைபவமாலை விரிவானது, தெளிவான வசன நடையிலுள்ளது. தமிழில் சரித்திர முறையில் எழுதப்பட்ட நூல்கள் சிலவே. யாழ்ப்பாண வைபவமாலை அவ்வகையிற் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறுதற்குரியது. அதன் ஆசிரியர் மயில்வாகனப் புலவராவார். இவர் ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அக்காலத்தில் கர்ண பரம்பரையாக அறிந்த வரலாறுகளை இவர் கைலாயமாலை வையாபாடல் என்ற நூல்களில் கூறப்பட்ட செய்திகளோடு இணைத்து யாழ்ப்பாண வைபவமாலை என்ற இந்நூலை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.
ISBN : 9559429876 | Pages : xvi + 104  | Price : 200.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 219
நல்லூர் கந்தசுவாமி | 2010
Author : சபாநாதன், குல
Book Category : இந்து சமயம்
இலங்கையின் புகழ்பூத்த சைவ ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோயில் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் மகோற்சவ சிறப்புக்களையும் பூசை முறைகளையும் கோயிலமைப்பினையும் இந்நூல் விபரிக்கின்றது. மேலும் நல்லூர் கந்தன் மேல் பாடப்பெற்ற அரிய பாடல்களின் தொகுப்பினையும் இந்நூல் கொண்டுள்ளது. கோயில் தொடர்பான புகைப்படங்கள் இந்நூலை மேலும் சிறப்பிக்கின்றன.
ISBN : 9559429930 | Pages : xxxvi + 230  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 211
Sabanathan, Kula's Books Recently Published by KBH

Powered By : Viruba