சின்னத்தம்பி, மா |Sinnaththaby, M
New Books
ஆசிரியர் வழிகாட்டி - ஆசிரியர் தொழிலும் வாழ்வும் | 2012
Author : சின்னத்தம்பி, மா
Book Category : கல்வியியல்
ஆசிரியர்கள் உலகம் முழுவதும் அறிவை உருவாக்குவதிலும், அறிவைப் புதுப்பிப்பதிலும், அறிவைப் பரப்புவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கல்வியை வைத்து தொழில்செய்யும் வேறுபல துறையினரளவுக்கு இவர்கள் தம்வாழ்வில் உயர்வதில்லை. இந்த வகையில் அவர்களுக்கு வழிகாட்டி உதவும் வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் இந்நூல் வினாவிடை வடிவில் எழுதப்பட்டுள்ளது. 
ISBN : 9789556593488 | Pages : 72  | Price : 150.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 534
பரீட்சைகளுக்கு தயாராவது எப்படி ? | 2011
Author : சின்னத்தம்பி, மா
Book Category : பொது
இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் அபிவிருத்தி அலகினது பதில் பணிப்பாளராகவும் பணியாற்றிவருகிறார். பாடசாலை மாணவர் கல்வி, அவர்களது பரீட்சைகள், அவர்களது முன்னேற்றம் தொடர்பாக ஏறக்குறைய நான்கு தசாப்த கால அனுபவம் கொண்டவர்.மாணவர்கள் பரீட்சை தொடர்பாக எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் குறைப்பதற்கான வழிகாட்டல்கள் இதில் இடம் பெறுகின்றன.எளிய முறையில் - வினாவிடை வடிவில் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களது பெற்றோரும் இதன் மூலம் பயன்பெறமுடியும் என நூலாசிரியர் நம்புகிறர்.
ISBN : 9789556592900 | Pages : 38  | Price : 90.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 476
இலங்கைப் பொருளாதாரம் : கோட்பாடுகளும் நடைமுறைகளும் | 2008
Author : சின்னத்தம்பி, மா
Book Category : பொருளியல்
இலங்கைப் பொருளாதாரத்தினை அறிமுகம் செய்வதாக இந்நூல் அமைகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் உயர்தர வகுப்பில் கற்கும் கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி தாகமுடைய ஆசிரியர்கள் போன்ற கற்கும் குழாத்தினர் பரீட்சை நோக்கிலும் கல்வித் தகைமைச் சான்றிதழ் பெறும் நோக்கிலும் இலங்கைப் பொருளாதாரம் பற்றிக் கற்க விரும்புகின்றனர். அதேவேளை பொதுமக்கள் தொழில் நிறுவன உரிமையாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் வெகுசன ஊடகத்தினர் ஆகியோரும் இலங்கைப் பொருளாதாரத்தினை அறிய விரும்புகின்றனர். இவர்களின் இந்த தேவைகளை நிறைவு செய்வதற்காகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது...
ISBN : 9789556591477 | Pages : xvi + 181  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 334
Sinnaththaby, M's Books Recently Published by KBH

Powered By : Viruba