செல்வநாயகம், வி |Selvanayagam, V
Selvanayagam, V's Books Published by KBH
பேராசிரியர் வி. செல்வநாயகம் கட்டுரைகள் | 0000
Author : செல்வநாயகம், வி
Book Category : தமிழ் இலக்கியம்
பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்களால் எழுதப்பெற்ற ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு.
பொருளடக்கம் : 1. கடலோசை  / 2. கண்ணுற்றான் வாலி  / 3. புறநானூற்றில் ஒரு பாட்டு  / 4. பாஞ்சாலி சபதத்தில் புதுமையும் பழமையும்  / 5. உவமையும் உருவகமும்  / 6. பழந்தமிழ் செய்யுள் மரபு  / 7. ஞானப் பிரகாச சுவாமிகள்  / 8. வழக்குஞ் செய்யுளும்.
ISBN : | Pages : 56  | Price : 200.00  | Size : 125 mm x 185 mm  | KBH No : 162
உரைநடை வரலாறு | 2000
Author : செல்வநாயகம், வி
Book Category : அரச அறிவியல்
இந்நூல் தமிழில் உரைநிலை இலக்கியங்கள் வளர்ந்த வரலாற்றினைத் தெளிவாக எடுத்துக்கூறும் துல்லிய ஆய்வு நூலாகும். இத்துறையில் இந்நூல் ஒரு முன்னோடி. உரைநிலை எழுத்துக்களின் வளர்ச்சியையும் ஒவ்வொரு கட்டத்தின் வளச் செழுமையையும் எடுத்துக் கூறும் இந்நூல் தமிழில் உரைநடை வளர்ச்சி பற்றிய ஈடிணையற்ற விமர்ச்சிப்பாக அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்நூல் இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழிலக்கிய ஆய்வு வரலாற்றிலும் புலமைக் கோலோச்சுவதாக நின்று நிலைக்கப் போகின்றது.
ISBN : 9789556592672 | Pages : viii + 159  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 082
தமிழ் இலக்கிய வரலாறு | 2005
Author : செல்வநாயகம், வி
Book Category : தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதப்பெற்ற நூல்களுள் முக்கியமான ஒன்றாக போற்றப்படுவது இந்நூல். தமிழ் இலக்கிய வரலாற்றினைத் தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகளின் பின்புலத்தில் எடுத்துக்கூறிய முதற் பாடநூல் இதுவேயாகும். இன்று மாணவர்களிடையே பெருவழக்கில் உள்ள இலக்கிய வரலாற்றுக் காலப் பெயர்கள் இந்த நூலிலிருந்தே வருகின்றன. இந்நூலின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் வையாபுரிப்பிள்ளை முதல் ஜேசுதாசன் வரை பல தமிழிலக்கிய அறிஞர்கள் போற்றியுள்ளார். முதன்முதலில் வெளிவந்து (1951) அரை நூற்றாண்டை கடந்த இன்றைய நிலையிலும் இந்நூல் சுட்டும் இலக்கிய வரலாற்று அணுகுமுறை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.
ISBN : 9559429337 | Pages : x + 198  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 081

Powered By : Viruba