செல்வகுணபாலன், செல்லத்துரை |Selvagunabalan, S
Selvagunabalan, S's Books Published by KBH
தேசவழமைச் சட்டம் | 2013
Author : செல்வகுணபாலன், செல்லத்துரை
Book Category : சட்டம்
இந்நூலானது வடமாகாணத் தமிழர்களின் வழக்காற்றுச் சட்டமான தேசவழமையினை விரிவாக ஆராய்கின்றது. தேசவழமைச் சட்டமானது இடம்சார் தன்மையையும், ஆள்சார் தன்மையையும் கொண்டதாகும். எனவே, வடமாகாணத் தமிழர்கள் இலங்கையில் எங்கு வசித்தாலும் அவர்களுக்கு தேசவழமையே ஏற்புடையதான சட்டமாகும். தேசவழமை யாருக்கு ஏற்புடையதாகும், தேசவழமையின் கீழான வழக்காற்றுத் திருமணங்கள் என்பவற்றையும் தேசவழமையினால் ஆளப்படுபவர்களின் ஆதனமான முதுசம், சீதனம் மற்றும் தேடிய தேட்டம் என்பவற்றையும் பற்றி தெளிவாக இந்நூல் எடுத்துக் கூறுகின்றது. மேலும், தேசவழமைக்குட்பட்ட கூட்டுச் சொந்தக் காணிகளைக் கொள்வனவு செய்கின்ற போது ஏற்புடையதான முன்வாங்குரிமையையும் இந்நூல் தெளிவாக தீர்க்கப்பட்ட மாவட்ட மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளை ஆதாரம் காட்டி விளக்கியுள்ளது.
ISBN : 9789556593631 | Pages : x + 134  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 549
இலங்கைச் சட்டங்கள் : ஓர் அறிமுகம் | 2012
Author : செல்வகுணபாலன், செல்லத்துரை
Book Category : சட்டம்
இந்நூலின் நோக்கமானது பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் சட்டம் பற்றிய அறிமுகத்தை வழங்குவதாகும். பொதுவாக சட்டம் பற்றிய நூல்களைத் தமிழில் காண்பது மிகமிக அரிதாகவே உள்ளது. மேலும் ஒரே நூலில் சட்டம் பற்றிய பொதுவான அறிவினைப் பெறுவதும் மிகவும் அரிதாகவேயுள்ளது. இந்நூலானது சட்டம் என்றால் என்ன? என்ற விடயத்தில் ஆரம்பித்து 2006ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்களையும் சுருக்கமாகக் கூறுகின்றது. இந்நூல் நான்கு பகுதிகளையும் அதனுள் 32 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
ISBN : 9789556590630 | Pages : xvi + 379  | Price : 500.00  | Size : 14.5 cm x 21.5 cm  | KBH No : 496

Powered By : Viruba