தனபாலன், பாலசுப்பிரமணியன் |Thanabalan, P
New Books
கல்விப் பிரயோக உளவியல் | 2010
Author : தனபாலன், பாலசுப்பிரமணியன்
Book Category : கல்வியியல்
கல்வியியல் மாணவர்களையும் ஆசிரியர்களையும் இலக்காகக் கொண்டு ‘கல்விப் பிரயோக உளவியல்’ என்னும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உளவியலின் இரு பரிமாணங்களாகிய கோட்பாட்டு உளவியலையும் பிரயோக உளவியலையும் முதன்மைப்படுத்தி இந்நூலாக்கம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. கோட்பாடுகளின் அடிப்படையிலே பிரயோக நிலைகளைச் செம்மைப்படுத்தவும் பிரயோகங்களில் இருந்து கோட்பாடுகளை நோக்கி நகரவும்வல்ல இடைவினைகளை முன்னெடுக்கக் கூடிய ஆக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. உளவியற் கல்வி அனுபவமும் உளவியலைப் பயிற்றுவிக்கும் அனுபவமும் பிரயோக நிலையில்....
ISBN : 9789556592368 | Pages : xii + 227  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 422
கல்வி முகாமைத்துவத்தில் விடய ஆய்வு | 2009
Author : தனபாலன், பாலசுப்பிரமணியன்
Book Category : கல்வியியல்
கல்வியியலில் விடய ஆய்வுக்கற்கை ஒரு புதிய துறையாகவே இன்றும் எமது நாட்டிலுள்ளது. இத்துறை வாண்மைத் தொழில் சார் கல்விப்பயில்வுகளில் முதன்மைகான கற்றல்-கற்பித்தல் முறையாக மிளிர்கின்றது. நவீன ஆசிரியர் கல்வி கல்வி முகாமைத்துவம் என்பவற்றில் பல்பரிமாணத் தேர்ச்சிகளையும். அனுபவங்களையும் பெற விடய ஆய்வுக் கற்கைகள் வழிகாட்டுகின்றன. இந்நூலில் கல்வியியல் விடய ஆய்வுகள் தொடர்பான அடிப்படை விடயங்கள் ஆய்வு அணுகுமுறைகள் ஆய்வுத்திறன்களை வளர்த்தல் தொடர்பான வழிகாட்டல்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன் மாதிரி விடய ஆய்வுக் கற்கைகளும் விடைகளுக்கான வழிகாட்டல்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.... 
ISBN : 9789556591903 | Pages : viii + 131  | Price : 250.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 376
பாலர் கல்வியும் நவீன செல்நெறிகளும் | 2009
Author : தனபாலன், பாலசுப்பிரமணியன்
Book Category : கல்வியியல்
பாலர் கல்வியை வளமும் வலுவுமுடையதாகக் கட்டியெழுப்பாது ஆரம்பம் மற்றும் இடைநிலைக் கல்வியின் பின்னடைவுகளை மாற்றியமைக்க முடியாது என்ற நடப்பியலை முதற்கண் மனங்கொள்ள வேண்டியுள்ளது. உலகளாவிய முறையில் பாலர் கல்வி மீதான கவனக்குவிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகின்ற வேளை எமது நாட்டு நிலவரங்களிலே பாரிய பின்னடைவுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் பாலர்கல்வி தொடர்பான சமகால அணுகுமுறைகளுக்கு வலுவூட்டும் வகையிலும் உலகதரிசனங்களையும் உள்நாட்டு நிலவரங்களைக் கருத்திற் கொள்ளும் வகையிலும் கல்வியியலாளர் திரு. பாலசுப்பிரமணியம் தனபாலன் அவர்களால் இந்நூலாக்கம் காலத்தின் தேவையறிந்து தரப்பட்டுள்ளது.
ISBN : 9789556591545 | Pages : xii + 119  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 340
Thanabalan, P's Books Recently Published by KBH

Powered By : Viruba