தனராஜ், தை |Thanaraj, T
Thanaraj, T's Books Published by KBH
மாற்ற முகாமைத்துவம் | 2011
Author : தனராஜ், தை
Book Category : கல்வியியல்
நவீன முகாமையியலில் மாற்றங்கள் பல நிலைகளிலும் பல தளங்களிலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. பெருமளவிலான நூல்களும் ஆய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழில் இத்துறையில் முகாமை நோக்கையும், கல்வி நோக்கையும் ஒன்றிணைத்து வெளியிடப்படும் முதல் நூலாகவும் முன்னோடி நூலாகவும் இந்நூல் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது. இரு துறைகளிலும் புலமையாளராக விளங்கும் நண்பர் தை. தனராஜ் அவர்கள் நன்குதிட்டமிட்டு ஆழ்ந்த நோக்கிலும் அகலெழு நோக்கிலும் இந்நூலை ஆக்கம் செய்துள்ளார். முகாமைத்துவ புலமைத்துணிச்சலும் கற்பித்தல் அனுபவத்திரட்டும் நூலெங்கும் இணைபரப்பி நிற்கின்றன.
ISBN : 9789556592962 | Pages : 128  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 483
செயல்வழி ஆய்வு | 2005
Author : தனராஜ், தை
Book Category : கல்வியியல்
தாம் எதிர்நோக்கும் கற்பித்தல் மற்றும் வகுப்பறை முகாமைத்துவப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை ஆசிரியர்கள் சர்வதேச ஆராய்ச்சிகளிலிருந்து பெற்றுக் கொள்வதைவிட தமது சுய ஆய்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இச்சிந்தனையிலிருந்து பெறப்பட்டதே செயல்வழி ஆய்வாகும். தாம் இனங்கண்ட பிரச்சினைகளுக்கான தீர்வினை தாமே நடைமுறைப்படுத்த ஆசிரியர்களை வலுப்படுத்தவும் அவர்களுடைய ஆய்வுத் திறன்களை மேம்படுத்தவும் உதவும் செயல்வழி ஆய்வின் கோட்பாடு பற்றியும் அதன் பிரயோகம் பற்றியும் மிகவும் பயனுள்ள ஓர் அறிமுகத்தை இந்நூல் முன்வைக்கின்றது.
ISBN : 9559429906 | Pages : xv + 91  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 209

Powered By : Viruba