செல்வி, திருச்சந்திரன் |Selvi, Thiruchchandran
Selvi, Thiruchchandran's Books Published by KBH
தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலைநோக்கு | 1997
Author : செல்வி, திருச்சந்திரன்
Book Category : அரச அறிவியல்
இந்நூல் வரலாறு மானிடவியல், சமூகவியல் என்ற பல்சங்க கற்கை நெறிப் பாங்குடைத்தாயிருப்பதை அவதானிக்கலாம். மாக்சிச அடிப்படை ஒன்று இருந்தாலும் அதை மீறிய ஒரு தேடலும் இந்நூலிலுண்டு. மேலும் சமூகப் பரிமாணங்களை பொருளாதார அரசியல் உருவாக்கங்களினூடாக விளக்க முற்படுகிறது. அதே சமயம் வர்க்கம் சாதி என்ற பிரிவுகளுக்கூடாகக் கலாசார கட்டுமானங்களை இனம் கண்டு அரசியல் பொருளாதார உருவாக்கங்களுக்கும் கலாசார கட்டுமானங்களுக்கும் உள்ள தொடர்பினையும் தொட்டு நிற்கிறது. தமிழ் கலாசார இயல்புகளையும் நியதிகளையும் கட்டவிழ்த்து ஆண்சார்ந்த நோக்கினையும் ஆணை மேல் நிலைப்படுத்திய ஆதிக்க அதிகார சமூக கட்டுமானங்களையும் கருத்தியலையும் தொடர்புபடுத்துகிறது. 
ISBN : | Pages : xvii + 191  | Price : 287.25  | Size : 145 mm x 215 mm  | KBH No : 171

Powered By : Viruba