நடராஜன், நவாலியூர் சோ |Nadarajan, Navaliyoor S
Nadarajan, Navaliyoor S's Books Published by KBH
தம்மபதம் | 2008
Author : நடராஜன், நவாலியூர் சோ
Book Category : ஏனையவை
அறவழி எனும் அர்த்தத்தைத் தரும் ‘தம்மபதம்’ எனும் இந்நூல் பௌத்த பிடகங்களில் ஒன்றான சுத்தபிடகத்தைச் சேர்ந்த குத்தக நிகாயம் என்ற நூலின் ஒரு பகுதியாகும். இது பாளி மொழியில் 423 சூத்திரங்களாக 26 அத்தியாயங்களாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. பௌத்தர்களால் இது பெரிதும் போற்றப்படுவதோடு திருக்குறள் பகவத்கீதை போன்ற நூல்களுக்கு இணையானதாய் உலக இலக்கியத்திலே அவற்றைப் போலச் சிறந்த நூலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தர் பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாலான இது புத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும் பிரமாண நூலாகவும் அமைகிறது. கி.மு. 500 அளவில் தொகுக்கப்பட்ட இப்புகழ்பெற்ற நூல் பாளியிலிருந்து பன்மொழி அறிஞர் சோ.நடராசன் அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ISBN : 9789556591362 | Pages : vi + 113  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 323
இரவிந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி | 2008
Author : நடராஜன், நவாலியூர் சோ
Book Category : ஏனையவை
தாகூர் அமரகவி அவருடைய பாட்டுக்கள் அழியா புகழ் பெற்றவை. வங்க இலக்கியம் தாகூருடைய பாட்டுக்களால் ஒரு மறுமலர்ச்சியைப் பெற்றது. கவி உலகில் இது தாகூர் யுகமென்றே பலர் கொண்டாடினார்கள். இத்தகைய மாபெரும் கவியின் கவியை உலகுக்குக் காட்டிய படைப்பே ‘கீதாஞ்சலி’. அதுவே அவருக்கு நோபல் பரிசையும் பெற்றுக் கொடுத்தது. இவ் அற்புதப் படைப்பினை கவிநயம் சொட்டும் சரளமான மொழிநடையில் படிப்போருக்கு புரியும் விதத்தில் தமிழ்ப்படுத்தி தருகின்றார் திரு சோ. நடராஜன் அவர்கள்.
ISBN : 9556591257 | Pages : xiv + 97  | Price : 300.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 316

Powered By : Viruba