நவரத்தினம், கலைப்புலவர் க |Navarathinam, Kalaippulavar K
Navarathinam, Kalaippulavar K's Books Published by KBH
இலங்கையில் கலை வளர்ச்சி | 2007
Author : நவரத்தினம், கலைப்புலவர் க
Book Category : நுண்கலை
பாரத நாட்டின் கலை கடல் கடந்து இலங்கை சாவகத்தீவு சீயம் கம்போடியா என்ற தேசங்களிற் பரவிய வரலாறு பாரத நாட்டுச் சரித்திரத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இலங்கையில் அக்கலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வளர ஆரம்பித்தது. அக்காலத்திலிருந்து இலங்கை மன்னர்கள் தங்களது தலைநகரமாகிய அநுராதபுரத்திலும் வேறு இடங்களிலும் பாரத நாட்டைப் பின்பற்றி புத்த சிலைகளையும் தாகோபா என்ற ஆலயங்களையும் தாபித்தனர். அவை இலங்கையிற் பூர்வீக கலைச்சின்னங்களாக விளங்குகின்றன. அநுராதபுரத்திலும் பொலன்னறுவா என்ற புலத்தி நகரிலும் காணப்படும் புத்த விக்கிரகங்கள் அதிசயிக்கத்தக்க சிற்ப இலஷணம் பொருந்தியவை. 
ISBN : 9789556590706 | Pages : xii + 141  | Price : 500.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 252
தென்னிந்திய சிற்ப வடிவங்கள் | 2006
Author : நவரத்தினம், கலைப்புலவர் க
Book Category : நுண்கலை
“தென்னிந்திய சிற்பங்களைக் குறித்துத் தமிழில் ஒரு நூல் இதுவரை வெளிவந்ததில்லை. திரு க. நவரத்தினம் அவர்கள் எழுதிய இந்நூலே முதலாவதாகும். இந்நூலாசிரியர் சிற்பத்தைக் குறித்து வெளிவந்துள்ள பல ஆங்கில நூல்களையும் சிற்பநூற் கருத்துக்களை ஏகதேசமாய்க் கூறுகிற சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய தமிழ்க் காவியங்களையும் நன்கணம் கற்றுணர்ந்து தமது நூலிற் பயன்படுத்தியிருக்கின்றார். இன்றுவரையுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறும் கொள்கைகளை எடுத்துப் பரிசீலனை செய்து தமது முடிபையுங் காட்டியிருக்கிறார். ஆசிரியர் இந்நூலில் சிற்ப விசயங்களைப் பாகுபாடு செய்து விளக்கும் முறையும் பாராட்டத்தக்கது. அவரது தமிழ் நடையும் மிகத் தெளிவாயும் இனிமையாயும் உள்ளது.... 
ISBN : 9559429884 | Pages : xvi + 207  | Price : 400.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 214

Powered By : Viruba