நித்நியானந்தன், வி |Nithiyananthan, V
Nithiyananthan, V's Books Published by KBH
பருநிலைப் பொருளியல் : ஓர் அறிமுகம் | 2008
Author : நித்நியானந்தன், வி
Book Category : பொருளியல்
பொருளியலின் ஒரு பகுதியாகிய பருநிலைப் பொருளியலை அறிமுகம் செய்யும் இந்நூல் எட்டுப் பகுதிகளில் உள்ளடங்கும் மொத்தம் 22 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. நூல் பருநிலைப் பொருளியலின் அடிப்படையான தத்துவங்களை உரியவாறு விளக்குவதுடன் விளக்கங்களுக்கு ஆதாரமான வரைபடங்களையும் கொண்டுள்ளது. நூலின் முடிவிலுள்ள அருஞ்சொல் விளக்கக் கோவை முக்கியமான துறைசார் சொற்களையும் சொற்றொடர்களையும் தேர்ந்தெடுத்து அவற்றை வரையறை செய்வதுடன் அவற்றிற்குச் சமமான ஆங்கில மொழிபெயர்ப்பையும் தருகின்றது. தேவையான ஒரு விடயத்தை இலகுவிற் கண்டறிந்து கொள்ளக் கூடிய விரிவானதொரு சுட்டியும் நூலினை அணி செய்கின்றது.
ISBN : 9789556591346 | Pages : xxxii + 647  | Price : 2500.00  | Size : 19 cm x 25cm  | KBH No : 300
இலங்கை அரசியற் பொருளாதாரம் ( 1948 - 1956 ) : வர்க்க இனத்துவ நிலைப்பாடுகள் | 2002
Author : நித்நியானந்தன், வி
Book Category : பொருளியல்
இலங்கை இன்று அரசியற் பொருளாதார மட்டத்தில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மிகுந்த தீவிரத் தன்மை வாய்ந்தவை என்பதில் ஐயமில்லை. அதற்குப் பொறுப்பான காரணிகளில் வர்க்க மட்டத்திலும் இனத்துவ மட்டத்திலும் இடம்பெற்ற வளர்ச்சிகளுக்கும் மாறுபாடுகளுக்கும் பாரியதொரு பங்குண்டு. அத்தகைய வளர்ச்சிகளையும் மாறுபாடுகளையும் இனம் கண்டு அவை எவ்வாறு இலங்கையின் அரசியற் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளன என்பதை இந்த நூல் முன்வைக்கின்றது. ஆரம்பத்தில் வர்க்க நலன்களும் இனத்துவ நலன்களும் எவ்வாறு இரண்டறக் கலந்திருந்தன என்பதும் பின்பு இனத்துவ நலன்கள் படிப்படியாக வர்க்க நலன்களைவிட எவ்வகையில் மேலோங்கிச் செல்லத் தலைப்பட்டன என்பதும் விளக்கப்படுகின்றது....
ISBN : 9559429426 | Pages : xv + 288  | Price : 562.50  | Size : 14 cm x 21 cm  | KBH No : 108

Powered By : Viruba