மொழியியல்    |   Linguistics    |   වාග් විද්‍යාවNew Books
சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவரின் இலக்கணசந்திரிகை, வினைப்பகுபதவிளக்கம் | 2008
Author : சுபதினி, ரமேஷ்
Book Category : மொழியியல்
ஈழத்து வரலாற்றிலே குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்கள் பலருள் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சோ்ந்த அ.குமாரசுவாமிப்புலவர் அவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார். இவரின் இலக்கண சந்திரிகை, வினைப்பகுபத விளக்கம் தமிழ் இலக்கண மரபு வாய்ந்த நூல்களுள மிகவும் போற்றுதற்குரியவை. வடமொழியின் சுவரூபங்களையும், அவற்றின் மூலங்களையும், மூலங்கள் விகுதி முதலிய உறுப்புக்களோடு சேரும் வழிவகைகளையும், செய்கை வேறுபாடுகளையும் எடுத்துணர்த்துவது இலக்கண சந்திரிகையாகும்.... 
ISBN : 9789556591453 | Pages : iv + 131  | Price : 350.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 332
மொழியும் பிற துறைகளும் | 2006
Author : சண்முகதாஸ், எஸ்
Book Category : மொழியியல்
நாம் தாய் மொழி பேசுகின்றோம். அம்மொழி பற்றி ஆராயமலே அதனை நாம் பேசி வருகிறோம். ஒரு நாளில் பல ஆயிரம் சொற்களைப் பயன்படுத்துகின்றோம். இதனை புறநிலையிலேயே வைத்து ஆராய முற்பட்டபொழுது தான் இம்மொழி பற்றிய வியப்பான செய்திகள் வெளிவந்தன. மொழியியல் என்றொரு புதிய துறையும் தோன்றியது. இத்துறைக்கும் பல சமூக அறிவியல் துறைகளுக்கும் உள்ள தொடர்புகள் இனங்காணப்பட்டன. சமூகம் பண்பாடு தகவல் தொழில்நுட்பம் மருத்துவம் பொறியியல் ஆகியவற்றுடன் மொழி தொடர்புடையதாக உள்ளது. இத்தொடர்புகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன....
ISBN : 955942985x | Pages : viii + 124  | Price : 262.50  | Size : 145 mm x 215 mm  | KBH No : 205
சாம்ஸ்கியின் புது மாற்றிலக்கணம் | 1998
Author : சண்முகம், செ
Book Category : மொழியியல்
மொழியியல் உலகில் மாபெரும் புரட்சி ஒன்றைத் தோற்றுவித்தவர் நோம் சாம்ஸ்கி (ழேயஅ ஊhழஅளமல) என்பது மொழியியல் துறையைச் சேர்ந்த அனைவரின் ஒருமித்தக் கருத்தாகும். மனித மொழிகளின் புற அமைப்பைப் பல நோக்குகளில் ஆய்வு செய்து கொண்டிருந்த மொழியியல் துறையில் அவற்றின் அக அமைப்பை - மனித மூளைக்குள்ளே அமைந்துள்ள மொழியறிவின் அமைப்பை - கண்டறியும் முயற்சியில் 1956லிருந்து பேராசிரியர் சாம்ஸ்கி ஈடுபட்டு வருகிறார். அனைத்து இயற்கை மொழிகளுக்கும் ஒரு பொதுவான அமைப்பு உண்டு என்பதும் அதற்குக் காரணம் அம்மொழிகளின் அக அமைப்பைத் தீர்மானிக்கின்ற மனித மூளையின் அமைப்பு ஒன்றாக இருப்பதே என்பதும் சாம்ஸ்கியின் கருத்து....
ISBN : | Pages : vi + 362  | Price : 468.75  | Size : 145 mm x 215 mm  | KBH No : 163
All Books
சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவரின் இலக்கணசந்திரிகை, வினைப்பகுபதவிளக்கம் | சுபதினி, ரமேஷ் | 2008
மொழியும் பிற துறைகளும் | சண்முகதாஸ், எஸ் | 2006
சாம்ஸ்கியின் புது மாற்றிலக்கணம் | சண்முகம், செ | 1998
இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் | அருணாசலம், க | 1997

Powered By : Viruba