சட்டம்    |   Law    |   නීතියNew Books
இலங்கையின் அரசியல் யாப்புகள் | 2013
Author : யோதிலிங்கம், சி. அ
Book Category : சட்டம்
இந்நூல் மாணவர்களை மட்டுமல்ல அரசியல் யாப்பு அறிவின் தேவையை வேண்டி நிற்கின்ற அனைவருக்கும் உதவும். இந் நூலில் அரசியல் யாப்புகள் பற்றிய அறிமுகம், இலங்கையின் அரசியல் வரலாற்றுப் பின்னணி, கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம், குறூமக்கலம் அரசியல் சீர்திருத்தம், 1912இலிருந்து 1920வரை இலங்கையின் அரசியல் நிலை, மானிங் அரசியல் சீர்திருத்தம், மானிங்- டிவன்சயர் அரசியல் சீர்திருத்தம், டொனமூர் அரசியல் யாப்பு, சோல்பரி அரசியல் யாப்பு, முதலாவது குடியரசு அரசியல் யாப்பு, இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு, 1978ஆம் ஆண்டின் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், அரசியல் அமைப்பிற்கான 17ஆவது திருத்தம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
ISBN : 9559429493 | Pages : xiii + 242  | Price : 425.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 112
இலங்கை அரசியல் | 2013
Author : சிவராஜா, அம்பலவாணர்
Book Category : சட்டம்
இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இது வரையும் பதின்மூன்று சந்தர்ப்பங்களில் (சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியிலும் நடத்தப்பட்ட தேர்தல்களில்) மக்களின் விருப்பங்களுக்கேற்ப ஒரு கட்சிக்கோ அல்லது பல கட்சிகள் சேர்ந்த கூட்டிற்கோ அதிகாரம் கைமாற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா இலங்கையில் படிப்படியாக அறிமுகப்படுத்திய ஜனநாயக முறையில் அமைந்த ஸ்தாபனங்களினூடாகவும் இந்நாட்டில் தோற்றம் பெற்ற போட்டி ரீதியிலான கட்சி முறையினாலும் இது சாத்தியமாயிற்று. இவை இலங்கை அரசியலில் ஓரளவு உறுதிப்பாட்டினையும் தொடர்ச்சியையும் ஏற்படுத்தின. இருந்தும் இலங்கையை அரசியல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாக தொடர்ந்தும் கொள்ள முடியாதுள்ளது. 
ISBN : 9559429175 | Pages : xiv + 267  | Price : 295.00  | Size : 14.5 cm x 21.5 cm  | KBH No : 164
தேசவழமைச் சட்டம் | 2013
Author : செல்வகுணபாலன், செல்லத்துரை
Book Category : சட்டம்
இந்நூலானது வடமாகாணத் தமிழர்களின் வழக்காற்றுச் சட்டமான தேசவழமையினை விரிவாக ஆராய்கின்றது. தேசவழமைச் சட்டமானது இடம்சார் தன்மையையும், ஆள்சார் தன்மையையும் கொண்டதாகும். எனவே, வடமாகாணத் தமிழர்கள் இலங்கையில் எங்கு வசித்தாலும் அவர்களுக்கு தேசவழமையே ஏற்புடையதான சட்டமாகும். தேசவழமை யாருக்கு ஏற்புடையதாகும், தேசவழமையின் கீழான வழக்காற்றுத் திருமணங்கள் என்பவற்றையும் தேசவழமையினால் ஆளப்படுபவர்களின் ஆதனமான முதுசம், சீதனம் மற்றும் தேடிய தேட்டம் என்பவற்றையும் பற்றி தெளிவாக இந்நூல் எடுத்துக் கூறுகின்றது. மேலும், தேசவழமைக்குட்பட்ட கூட்டுச் சொந்தக் காணிகளைக் கொள்வனவு செய்கின்ற போது ஏற்புடையதான முன்வாங்குரிமையையும் இந்நூல் தெளிவாக தீர்க்கப்பட்ட மாவட்ட மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளை ஆதாரம் காட்டி விளக்கியுள்ளது.
ISBN : 9789556593631 | Pages : x + 134  | Price : 450.00  | Size : 145 mm x 215 mm  | KBH No : 549
All Books
இலங்கையின் அரசியல் யாப்புகள் | யோதிலிங்கம், சி. அ | 2013
இலங்கை அரசியல் | சிவராஜா, அம்பலவாணர் | 2013
தேசவழமைச் சட்டம் | செல்வகுணபாலன், செல்லத்துரை | 2013
இலங்கைச் சட்டங்கள் : ஓர் அறிமுகம் | செல்வகுணபாலன், செல்லத்துரை | 2012
Legal Status of Right to Life in International Law | மாணிக்கவாசகர் இளஞ்செழியன் | 2011

Powered By : Viruba