பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் | 2005 No : 183
Author : சிவத்தம்பி, கா

Category : தமிழ் இலக்கியம்
ISBN : 978955429562
Price : 937.50
Pages : xxviii + 445
Size : 14 cm X 21 cm
Translated By : அம்மன்கிளி முருகதாஸ்
Quantity :
 
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்ற இந்நூல் சங்ககால ஆரம்பத்திலிருந்து சிலப்பதிகார காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் நாடகம் பற்றிப் பேசுகிறது. உண்மையில் இந்நூல் தமிழ்ச் சமூகத்தின் நாடகத்தை நாடகச் சூழலை நாடகக் கலைஞரை நாடகப் பண்பாட்டை அவற்றின் சமூக வரலாற்றினூடாக ஆராய்கிறது. தமிழ் நாடகத்தின் பலங்களை பலவீனங்களை விளங்கிக் கொள்ளக் கிரேக்க நாடகத்துடன் அதை ஒப்பிட்டாராய்கிறது. இந்நூலை வாசிக்கும் ஒருவர் பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றினூடாக அதன் திரஜெடி கொமடி மற்றும் சற்றர் நாடகங்கள் என்பவற்றை விளங்கிக் கொள்வதுடன் குறிப்பிட்ட காலத்தில் தமிழ் நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி மாற்றங்கள் என்பவற்றையும் தமிழ்ச் சமூகத்தின் சமூக வரலாற்றினூடாக அறியவும் இது உதவும். அத்துடன் கிரேக்கத்தினதும் தமிழ்நாட்டினதும் சமூகங்களின் பண்பாடு - வாழ்வியல் என்பன அவ்வச் சமூகங்களின் நாடகங்களை வடிவமைத்த முறைமையையும் இந்நூலின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இந்நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு 23 வருடங்களாகியும் இதிற் பேசப்பட்ட விடயங்கள் இன்னமும் தமிழ்மொழியில் வேறு ஆசிரியராற் பேசப்படவில்லை என்பதே இந்நூலின் மிகப் பெரும் பலமாகும்.
உள்ளடக்கம் :
 • ஐராவதம் மகாதேவனின் ஆய்வு வெளிக்கொணரும் முக்கிய விடயங்கள் பற்றிய ஓர் ஆய்வுக்குறிப்பு
 • அறிமுகம்
 • 1. ஆய்வுப் பிரச்சினைகளும் முறைமையும்
 • 2. கிரேக்க நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
 • 3. ஆய்வு மூலங்கள்
 • 4. ஆய்வுக்குரிய காலத்துத் தமிழகச் சமூகம் வரலாறு : பின்புலக் கட்டமைவு
 • 5. வீரயுகத்தில் நடனமும் நாடகமும்
 • 6. நிலப் பிரபுத்துவ மேலாண்மைக் காலத்தில் நடனமும் நாடகமும்
 • 7. வணிக மேலாண்மைக் காலத்தின் நடனமும் நாடகமும்
 • 8. நடன நாடக வடிவங்களின் இயல்பும் தொடர்ச்சியும்
 • 9. கிரேக்கத்திலும் தமிழ்நாட்டிலும் நாடகக் கலை : நெறி முறைகள் பற்றிய நோக்கு
 • 10. தோற்றம் வளர்ச்சியிற் தொழிற்பட்ட காரணிகள்
 • அனுபந்தம்
 • உசாத்துணை
 • சுட்டி.
     

Powered By : Viruba