ஈழத்து இலக்கியமும் வரலாறும் | 2004 No : 180
Author : பத்மநாதன், சி

Category : தமிழ் இலக்கியம்
ISBN : 9559429442
Price : 600.00
Pages : xvi + 352
Size : 145 mm X 215 mm

Quantity :
 
ஈழத்து இலக்கியமும் வரலாறும் என்னும் இந்நூல் இலங்கைத் தமிழரின் பாரம்பரியம் பற்றிய கருவ10லம். இதிலே சமூக வரலாறு, அரசியல், சமூக வழமைகள், இலக்கிய மரபுகள், ஆலய வழமைகள், தொல்பொருட் சின்னங்கள், தமிழ்ச் சாசனங்கள், சமுதாய நிறுவனங்கள் என்பன பற்றிய அரிய விவரங்கள் அடங்கியுள்ளன. பழைய மரபுகளைப் புரிந்துகொள்வதற்கு வேண்டிய புதிய சிந்தனைகளும், முன்பு நூல்களில் வெளிவராத பெருமளவிலான புதிய விவரங்களும் இதிலே காணப்படுகின்றன. இந்நூலில் உள்ள பதினாறு கட்டுரைகளில் எட்டுக் கட்டுரைகள் - வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, ஸ்ரீ தக்ஷ்ணகைலாசபுராணம், கோணசேர் கல்வெட்டு போன்றவை - இலங்கைத் தமிழரின் வரலாற்று நூல்கள் பற்றியவை. இலங்கைத் தமிழர் வாழும் பிரதேசங்களின் வரலாற்று அம்சங்களை விளக்கும் நூல்கள் எல்லாவற்றையும் பற்றிய புலமைத்துவமான கட்டுரைகள் முதல்முதலாக ஒரே தொகுதியிலே சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஏனைய கட்டுரைகள் ஈழத்துத் தமிழ் சாசனங்கள் பற்றியும், வணிக கணங்களைப் பற்றியும், சிறப்புமிக்க தமிழர் பாரம்பரியத்தினைப் பிரதிபலிக்கும் தொல்பொருட் சின்னங்கள் பற்றியும், யாழ்ப்பாணத்து அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்து அரசியல், சமய, பண்பாட்டு மரபுகளைப் பற்றியவையுமாகும்.
 
பொருளடக்கம் :
 • 1. கோணேசர் கல்வெட்டு : சில ஆராய்ச்சிக் குறிப்புக்கள்
 • 2. வையாபாடல்
 • 3. கைலாயமாலை
 • 4. யாழ்ப்பாண வைபவமாலை
 • 5. மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்
 • 6. நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு
 • 7. கைலாசபுராணம்
 • 8. சித்திரவேலாயுதர் காதல் : சில வரலாற்றுக் குறிப்புக்கள்
 • 9. தமிழ்ச் சாசனங்களும் ஈழ வரலாற்று ஆராய்ச்சியும்
 • 10 .இலங்கையில் வணிக கணங்களும் நகரங்களும் (கி; பி .1000 - 1250)
 • 11. லங்காதிலக விகாரம் : வணிக கணமான பதினென்விஷயம் வழங்கிய தானம்
 • 12. இலங்கையிலுள்ள நானாதேசி வணிகரின் வெண்கல முத்திரை : தனிச்சிறப்புடையதொரு தொல்பொருட் சின்னம்
 • 13. கந்தளாய்ப் பிரம்மதேயம் 14. பொலனறுவைக்கால வெண்கலப் படிமங்கள்
 • 15. யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவரத்திகள் : குல விருதுகளும் சின்னங்களும்
 • 16. இலங்கையில் இந்து சமயம் : ஆரியசக்கரவர்த்திகள் காலம் (1250 - 1620)
 • உசாத்துணை நூல்கள்
 • சொல்லடைவு.
 
     

Powered By : Viruba